இரு தினஙளுக்கு முன், டீவியில் சேனல்களை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்த போது, மிகுந்த குழப்பத்துக்கு ஆளானேன். ஒரு சேனலில், மிஸ்டர் பாரத்தும், இன்னொரு சேனலில், ஜானியும் ஓடிக்கொண்டு இருந்தது. இரண்டுமே ரஜினி படம் என்றாலும், இரண்டும் பார்த்து வெகு நாட்களாகி விட்டிருந்தன. முடிவில், மிஸ்டர் பாரத் பார்க்கத் தீர்மானித்தேன். 1985யில், வெகுவாகப் பாராட்டபட்ட வெற்றிப்படம் அது. அதன் திரைக்கதை இன்றைய தேதிக்கு, பொருந்தாமல் இருந்தததாக எனக்கு தோன்றியது. அதையெல்லாம் எழுதி, ரஜினி ரசிகர்களின், வெறுப்புக்கு ஆளாக எனக்கு விருப்பமில்லை. 22 வருடங்களுக்கு முன்பு, அப்பா , அம்மா தங்கையுடன், திருச்சி காவேரி திரையரங்கில், இந்த படத்தை பார்த்தது நினைவுக்கு வந்தது. காலம் தான் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு பத்து வருடம் கழித்து, அதே காவேரியில்,நண்பர்களுடன், இந்தியன் (1996) , பார்த்தேன்.. இப்போ அது பார்த்தும் பத்து வருஷங்கள் ஆச்சு... அடடா... எனக்கு இவ்ளோ வயசாயிடுச்சா... ?