ஆகவே காதல் செய்வீர்..
அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள். தமிழர் வரலாற்றிலே , வீரமும் , காதலும், பிரிக்க முடியாதவை. கம்பரை அறிந்தோருக்கு, அம்பிகாபதியும், அமராவதியும், நன்றாய்த் தெரியும். சிலப்பதிகாரம் கூட காதலும், பெண்ணியமும் கலந்த காவியம். தலைவனை பிரிந்த தலைவி நிலையும், தூது சென்ற தோழியும், பிரிதலும், ஊடலும், கூடலும், குழைத்து வடித்த சங்கத்துக்கும் முந்திய தமிழ் இலக்கியங்கள் எத்தனை எத்தனை .. ஆகவே காதல் செய்வீர்.. சிலருக்கு காதலர் தினம் மறக்க முடியாத நினைவை கொடுத்திருக்கும்; சிலருக்கு காதலர் தினம் மறக்க வேண்டிய காதலை கொடுத்திருக்கும்; பறிக்கப்பட்ட அத்தனை ரோஜாக்களும், காதல் சொல்லியதுண்டா. ? சொல்லப்பட்ட அத்தனை காதலும், வெற்றி பெற்றதுண்டா ? நேசம் கொள்ள காதல் உதவுமானால், மனித நேயம் பெருக காதல் உதவுமானால், கனவு தேசம் உதயமாகுமானால், காதல் செய்வதில் தவறில்லை.. உற்ற மங்கை வேறினத்தில்; பெற்ற பிள்ளை செயல் புரட்சி; கற்ற கல்வி கலை சிறக்க, கொண்ட தொழிலில் மேன்மை பொங்க; மனை செழித்து மக்கள் பெருகி; வசந்தம் வீசும் ... எனில்.. அந்த காதல் என்றும் வாழ்க.. பொருத்தம் பார்த்து, குடும்பம் பேசி, பெண்ணும் பிடித்து, சுற்றம...