சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
இந்த மாதம் சனிப் பெயர்ச்சி நிகழப் போவதாகத் தெரிகின்றது. அதனுடைய பலா பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது. சில வாரங்களாக இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நான், இப்போது ஒன்பது மணி வாக்கில் வர ஆரம்பித்து இருக்கிறேன். புள்ளி மேலே புள்ளி வைத்து கோலம் போட்டுகொண்டிருந்த சன் டிவியும், கோலங்கள் தொடரில் , தோழர் என்று அன்போடு அழைக்கப்படும் கதாபத்திரத்தை இன்று கோபம் கொள்ளச் செய்து, சபதமிட வைத்து விட்டார்கள். போதாக் குறைக்கு அபியும் இன்று கோபம் கோபமாக பேசினார். கூடிய விரைவில் முடித்து விடுவார்கள் என்றுத் தோன்றுகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக இருக்குமா ? அரசி தொடர் கூட கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது போல் தோன்றுகின்றது. சிறு வயதில், எனது தாத்தாவிடம் இந்த மாதிரி பெயர்ச்சிகளைப் பற்றிக் கேட்டதுண்டு. "ஏன் தாத்தா, குருப் பெயர்ச்சி தான் ஆச்சே.. எனக்கு இந்த வாட்டியும் கணக்கு ல சிக்ஸ்டி மார்க்ஸ் மேல வரவில்லையே .. எப்போ தாத்தா நான் ஹன்ட்ரட் அவுட் ஆப் ஹன்ட்ரட் வாங்குவேன் ?" ஒழுங்க படிப்பான்னு ஓங்கி ஒன்னு கொடுக்காம, " அதுவா, இப்போ வக்கிரச்சிண்டு இருக்கு .. இன்னும் கொஞ்ச நாள்ல எல்...