Posts

Showing posts from September 7, 2014

வட்ட நிலா..

Image
வட்ட நிலா தொட்டு விட  எட்டி எட்டி நான் முயல.. எட்ட ஓடும்  சுட்டி நிலா  முகிலிடயில்  மறைந்ததுவே ...                   1 நித்தம் நித்தம் இந்த கதை  தொடர்ந்ததுவே-  யாவதனால் வட்டமான சுட்டி நிலா  களைத்து தினம் இளைத்ததுவோ..                2 மிக மெலிந்த இந்தத் திங்கள்  காற்றினிலே கறைந்ததுவோ  புவனமதை சுற்றி வந்த  சரிபாதி திங்களிலே..                                  3 தொட்டு விட நான் முயல  தொட்டு விட்ட எவரோ தான் பிட்டு பிட்டு தான் வுண்டு  விட்டனரோ ரீரேழ் நாளில்..                         4 கறைந்துவிட்ட முழு நிலவு  மீண்டு வந்து பிறப்பெடுத்து  மறுபடியும் தொடச்சொல்லி  மூட்டி விடும் இச்சையைத் தான்..                 5 இச்சைப்பட்ட மாந்தர்கள் தாம்  கோடி பல இருந்ததுண்டு  தொட்டு விட இயலாமல்  இச்சகத்தில் தொன்று தொட்டு..                    6 எத்தனை பேர் தொட்டனரோ  எத்தனை பேர் விட்டனரோ.. எண்ணிக்கை தெரியவில்லை  சந்திரனை கேட்டிடுவோம்..                          7 புவி முளைத்த நாள் முதலாய்  அன்று முதல் இன்று வரை  நடந்ததெல்லாம் கவனித்த  சாட்சி தானோ சந்திரனும்..