வட்ட நிலா..
வட்ட நிலா தொட்டு விட எட்டி எட்டி நான் முயல.. எட்ட ஓடும் சுட்டி நிலா முகிலிடயில் மறைந்ததுவே ... 1 நித்தம் நித்தம் இந்த கதை தொடர்ந்ததுவே- யாவதனால் வட்டமான சுட்டி நிலா களைத்து தினம் இளைத்ததுவோ.. 2 மிக மெலிந்த இந்தத் திங்கள் காற்றினிலே கறைந்ததுவோ புவனமதை சுற்றி வந்த சரிபாதி திங்களிலே.. 3 தொட்டு விட நான் முயல தொட்டு விட்ட எவரோ தான் பிட்டு பிட்டு தான் வுண்டு விட்டனரோ ரீரேழ் நாளில்.. 4 கறைந்துவிட்ட முழு நிலவு மீண்டு வந்து பிறப்பெடுத்து மறுபடியும் தொடச்சொல்லி மூட்டி விடும் இச்சையைத் தான்.. 5 இச்சைப்பட்ட மாந்தர்கள் தாம் கோடி பல இருந்ததுண்டு தொட்டு விட இயலாமல் இச்சகத்தில் தொன்று தொட்டு.. 6 எத்தனை பேர் தொட்டனரோ எத்தனை பேர் விட்டனரோ.. எண்ணிக்கை தெரியவில்லை சந்திரனை கேட்டிடுவோம்.. 7 புவி முளைத்த நாள் முதலாய் அன்று முதல் இன்று வரை நடந்ததெல்லாம் கவனித்த சாட்சி தானோ சந்திரனும்..