"முதலில், நான் ஒரு இந்தியன். !! "

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், " நான் மகாராஷ்டரியன் என்பதில் மிக்கப் பெருமை கொள்கிறேன், ஆனால், முதலில், நான் ஒரு இந்தியன். !! " என்று சொல்லிய சச்சினை முதலில் வாழ்த்துவோமே !!

சச்சின் மகாராஷ்ட்ராவுக்கு ஒன்றும் செய்ததில்லை எனவும், வினோத் காம்ப்ளிக்கு அவர் உதவி செய்யவில்லை என்றும் சிவ சேனாவின் சஞ்சய் ராவத் இன்றைய சாம்னா பத்திரிக்கையில் எழுதி இருக்கின்றார்..
சச்சின் இந்திய அணியில் இருப்பது கிரிக்கெட் விளையாட மட்டும் தான்..அன்றி, தனது மாநிலத்திலிருந்து விளையாட வந்த அனைவரையும் தூக்கி விடுவதற்கு அல்ல...

காங்கிரஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்க துவங்கி இருக்கிறது..
மகாராஷ்ட்ராவில், தமிழ் நாடு போல் நடிகர்கள் அரசியல் செய்ய முடியாது. கோவிந்தா ஒரு சிறிய உதாரணம். ஆனால், சச்சின், நிலைமை அவ்வாறு இல்லை.. வயது , மதம், மாநிலம் வேறுபாடின்றி பெரும்பான்மையான கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் உலகின் சிறந்த கிரிகெட் வீரர்..

சிவ சேனா தேவை இல்லாமல், சச்சின் விவரத்தை பெரிய விஷயமாக ஆக்குகிறதாகத் தோன்றுகிறது. பால் தாக்ரே இப்போது எதற்காக சச்சினை வம்பிற்கு இழுக்கின்றார் ? பாவம் !!! அவருக்கு ராஜ் தாக்ரேயின் வளர்ச்சியை தடுக்க வேறு ஏதும் வழி தெரிய வில்லை போலும்..

Comments

Popular posts from this blog

India lost the second test by 122 runs to Steve Bucknor & Benson

Pongalo Pongal...

Indha Naal Inia Naal