வெகு நாட்களுக்கு பிறகு..

மிதவும் வருத்தப்பட்ட விஷயம்..
YSR - ஆந்திர முதல்வரின் திடீர் மரணம். எதிரிக்கும் இப்படிப்பட்ட மரணம் சம்பவிக்ககூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சிப் பொறுப்பில் மீண்டும் அமர்ந்த சில மாதங்களிலேயே அடைந்த மரணம் ஆந்திர மக்களுக்கு பெரிதும் துக்கத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அம்மாநில மக்கள், விரைவில் இந்த துக்கத்திலிருந்து விடுபட்டு, ஒரு சிறந்த தலைமை பெற்று வர வேண்டுகிறோம்.

கந்தசாமி
ரிலீஸ் ஆன இரண்டாவது நாளில், அரைவாசி கூட்டம் நிரம்பிய தியேட்டரில் (பி வி ஆர் முலுன்ட்) என்னுடைய எட்டு மாத பெண் குழந்தையுடனும், அலுவலக நண்பர்கள் குடும்பத்தினருடனும் , கந்தசாமி ஐக் கண்டோம். இரண்டு வருட உழைப்பு படத்தில் நன்றாக தெரிந்தாலும், முதல பாதியில் கதாநாயகிக்கு இத்தனை பாடல் காட்சிகள் கொஞ்சம் அதிகம் போலத்தான் தெரிகிறது. படம் முழுக்க விக்ரம், விக்ரம் , விக்ரம் தான். வடிவேலு கதையை விட்டு சற்றுத் தள்ளி வந்தாலும், வருகின்ற இடங்களில் வெடிவேலுவாக இருக்கின்றார். பிரபுவும் படத்தில் இருக்கின்றார். தேவி பிரசாத்தின் இசையில் இளமைத்துள்ளல். மூன்று மணி நேரமும், தூங்கிக்கொண்டும், படம் பார்த்துக்கொண்டும், என்னுடைய கையில் இருந்த பெப்சி ஐ இழுக்க பார்த்தும், விளையாடிக் கொண்டிருந்த என் பெண் படம் முழுக்க அமைதியாக இருந்தது ஆச்சர்யம் மற்றும் சந்தோஷம்.
பழைய படம் - " Oneday in 1998 in Bhopal "



எழுத நிரம்ப ஆசையிருந்தும் , என்ன எழுதுவது என்று தோன்றாததால் ஒரு பழைய புகைப்படம் பொதிந்து அதைப்பற்றி சிறிது கொறித்து வைத்தால் என்ன என்று தோன்றியது.. கல்லூரி காலத்துக்கு பிறகு இரண்டாவது வசந்தம் போபால் பி எச் ஈ எல் நிறுவனத்தில் இருந்த ஒன்றரை ஆண்டு காலத்தை குறிப்பிடலாம். ஒரு சிறிய பிக்னிக் சென்று வந்த பிறகு வழியில் ஒரு சிறந்த புகைப்படம் நினைவிற்கு வேண்டும் என்று அனைத்து நண்பர்களுக்கும் தோன்றியதால், திடீர் முடிவெடுத்து ஒரு சம்பவம் போல் நிகழ்த்தி எடுத்த புகைப்படம் இது.

"அடிப்பது" போல் நடிக்கும் பாக்கியத்தை பெருந்தன்மையாக எனக்கு விட்டு கொடுத்த, அபின் சர்க்கார், மிஸ்ரா, வாணி, மிநோச்சா, ஆகிய அனைவருக்கும் நன்றி, மிக்க நன்றி.. !!!

Comments

Popular posts from this blog

India lost the second test by 122 runs to Steve Bucknor & Benson

Pongalo Pongal...

Indha Naal Inia Naal