Posts

Showing posts from 2009

"முதலில், நான் ஒரு இந்தியன். !! "

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், " நான் மகாராஷ்டரியன் என்பதில் மிக்கப் பெருமை கொள்கிறேன், ஆனால், முதலில், நான் ஒரு இந்தியன். !! " என்று சொல்லிய சச்சினை முதலில் வாழ்த்துவோமே !! சச்சின் மகாராஷ்ட்ராவுக்கு ஒன்றும் செய்ததில்லை எனவும், வினோத் காம்ப்ளிக்கு அவர் உதவி செய்யவில்லை என்றும் சிவ சேனாவின் சஞ்சய் ராவத் இன்றைய சாம்னா பத்திரிக்கையில் எழுதி இருக்கின்றார்.. சச்சின் இந்திய அணியில் இருப்பது கிரிக்கெட் விளையாட மட்டும் தான்..அன்றி, தனது மாநிலத்திலிருந்து விளையாட வந்த அனைவரையும் தூக்கி விடுவதற்கு அல்ல... காங்கிரஸ் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்க துவங்கி இருக்கிறது.. மகாராஷ்ட்ராவில், தமிழ் நாடு போல் நடிகர்கள் அரசியல் செய்ய முடியாது. கோவிந்தா ஒரு சிறிய உதாரணம். ஆனால், சச்சின், நிலைமை அவ்வாறு இல்லை.. வயது , மதம், மாநிலம் வேறுபாடின்றி பெரும்பான்மையான கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் உலகின் சிறந்த கிரிகெட் வீரர்.. சிவ சேனா தேவை இல்லாமல், சச்சின் விவரத்தை பெரிய விஷயமாக ஆக்குகிறதாகத் தோன்றுகிறது. பால் தாக்ரே இப்போது எதற்காக சச்சினை வம்பிற்கு இழுக்கின்றார் ? பாவம் !!! அவருக்கு ராஜ் தாக்ர...

இந்தியா சாம்பியன் .. ?

Image
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் முக்கியமான கிரிக்கெட் போட்டி தற்போது மழை காரணமாக தடை பட்டிருக்கிறது. இதனை எழுதிகொண்டிருக்கும் போது கூட ஆட்டம் முடித்துகொள்ளப்பட்டதக்க அறிவிக்கப் பட்டிருக்கிறது. இனி ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்து, பின், இந்திய அணி மேற்கு இந்திய அணியை வென்றால் மட்டுமே இந்தியா அணி அரை இறுதியில் நுழையும் வாய்ப்பை பெறும்.எனினும், நம்முடைய வாழ்த்துக்கள் அணிக்கு உரித்தாகட்டும்.மேலே காணப்படும் படம் இந்திய அணியின் 2008 முதலான ஆட்டங்களின் முடிவின் trend ஐக் கொடுக்கின்றது. (கொஞ்சம் டைம் கிடைத்ததால் எக்ஸ்செல் உபயோகித்து சார்ட் போட்டு டைம் பாஸ் செய்தேனாக்கும்... )

வாழ்க ஜனநாயகம்

நம் நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும், கருத்து சொல்லலாம். யாரைப் பற்றி வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம். எழுதலாம். பரபரப்புச் செய்திகள் வெளியிடலாம். கோர்ட்டில் வழக்கு போடலாம். வாய்தா வாங்கலாம். காசு கொடுத்து சரி பண்ணலாம். கட்சி மாறியதும் இழுத்துக் கொண்டிருந்த வழக்கை வழுக்கையாக மாற்றலாம். எப்போதும் ஆட்சியை ஆதரித்து அமைப்பை நடத்தலாம். வயிறு வளர்க்கலாம். கல்லூரி கட்டலாம். நன்கொடை வசூலிக்கலாம். எம். எல். ஏக்கள் படி உயர்வு கேட்கலாம் . அணுகுண்டு வெடித்து சோதனை செய்யலாம். சோதனை வெற்றி பெறலாம். வெற்றிப் பெறாமல் போகலாம். வெற்றிப் பெற்றால் கொண்டாடலாம். பெருமை அடையலாம். சோதனை முடிவினைப் பற்றி கருத்து சொல்லலாம். வந்த கருத்தை உடனே சொல்லி இருக்கலாம். பத்து வருடங்கள் கழித்து அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய உரிமை இருக்கலாம். திரு. சந்தானம் இந்தியாவின் அணு ஆயுத சோதனைப் பற்றி இப்போது சந்தேகம் கிளப்ப வேண்டிய அவசியம் என்ன ? என்கிற கேள்விக்கு பதில் தேடவேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதைப் பற்றிப் ...

சில நேரங்களில்..

ஒரு தொலை இயக்கியின் கதை... ஒரு சுபயோக சுபதினத்தில் எனது வீட்டில் இருக்கின்ற தொலை காட்சிப் பெட்டியை இயக்கச் செய்கின்ற தொலை இயக்கியின் செயல்பாடு நின்று விட்டது. தொலை இயக்கியின் உயிர் போன்ற மின்சார குளிகை (பாட்டரிக்கு வேறு ஏதாவது தமிழ்ச் சொல் இருக்கின்றதா ? ) இரண்டையும் மாற்றிப் பார்த்த பின்பும் செயல்பட வில்லை. என்னவென்று சொல்வது.. தொலைக் கட்சிப் பெட்டி அருகினில் சென்று ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக்கொண்டிருக்கப் பொறுமை இல்லை. எனது குழந்தை செய்வதைப் போன்று கீழே தரையில் டொக் டொக் என்று தட்டியும் பார்த்தாகி விட்டது. ஒன்றும் பிரயோஜனமில்லை. வேறு வழியின்றி எழுந்து சென்று தொலைக் கட்சிப் பெட்டி அருகில் நின்று ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டியதாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் சில நன்மைகளும் இருக்கின்றன. அவை கீழ்கண்டவாறு.. நிமிடத்திற்கு ஒருமுறை அலைவரிசை மாற்றப்படுவதில்லை. தொலைக் காட்சிப் பெட்டியிலேயே கண்கள் நிலை குத்திகொண்டிருக்கும் அவலம் இல்லை. எழுந்து சென்று அலைவரிசை மாற்றி மாற்றி, பின் மீண்டும் இருக்கையில் அமர்ந்து பார்க்கின்ற பொறுமை இழந்து, வேறு வேலைகளில் கவனம...

சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

இந்த மாதம் சனிப் பெயர்ச்சி நிகழப் போவதாகத் தெரிகின்றது. அதனுடைய பலா பலன்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது. சில வாரங்களாக இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நான், இப்போது ஒன்பது மணி வாக்கில் வர ஆரம்பித்து இருக்கிறேன். புள்ளி மேலே புள்ளி வைத்து கோலம் போட்டுகொண்டிருந்த சன் டிவியும், கோலங்கள் தொடரில் , தோழர் என்று அன்போடு அழைக்கப்படும் கதாபத்திரத்தை இன்று கோபம் கொள்ளச் செய்து, சபதமிட வைத்து விட்டார்கள். போதாக் குறைக்கு அபியும் இன்று கோபம் கோபமாக பேசினார். கூடிய விரைவில் முடித்து விடுவார்கள் என்றுத் தோன்றுகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக இருக்குமா ? அரசி தொடர் கூட கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது போல் தோன்றுகின்றது. சிறு வயதில், எனது தாத்தாவிடம் இந்த மாதிரி பெயர்ச்சிகளைப் பற்றிக் கேட்டதுண்டு. "ஏன் தாத்தா, குருப் பெயர்ச்சி தான் ஆச்சே.. எனக்கு இந்த வாட்டியும் கணக்கு ல சிக்ஸ்டி மார்க்ஸ் மேல வரவில்லையே .. எப்போ தாத்தா நான் ஹன்ட்ரட் அவுட் ஆப் ஹன்ட்ரட் வாங்குவேன் ?" ஒழுங்க படிப்பான்னு ஓங்கி ஒன்னு கொடுக்காம, " அதுவா, இப்போ வக்கிரச்சிண்டு இருக்கு .. இன்னும் கொஞ்ச நாள்ல எல்...

படிக்கலாமா...

கல்லூரி காலத்திலே தினமும் நூலகம் சென்று படிக்கின்ற நல்ல பழக்கம் இருந்து வந்தது. சற்றேரக்குறைய பதினைந்து வருடங்களாக, இந்த பழக்கம் விடுபட்டு விட்டது. மீண்டும் முயல திட்டம். நடக்குமா பார்ப்போம். !!!! சில வருடங்களுக்கு முன்பாக, என்னுடைய தின குறிப்பேட்டினில் இதனை நினவு கூர்ந்து எழுதியிருந்தது தற்போது கண்ணில் பட்டது. அது பின்வருமாறு.. ....ரொம்ப நாட்களாக ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வருகிறேன். எழுத வேண்டும் என்றால் படிக்கவும் வேண்டும் அல்லவா... ? படிக்க வேண்டிய புத்தகங்கள் ஏராளம் என்னிடம் உள்ளன. அவையெல்லாம் கடமைக்காக. அப்பாவின் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து பணம் கட்டிய பட்ட மேற்ப்படிப்புக்காக, வந்த புத்தகங்கள். சில புத்தகங்களை இன்னமும் திறக்கக் கூட இல்லை. கல்லூரி காலத்தே, கவிஞனாகவும், கலையார்வம் நிரம்பியும் கலகலவென நண்பர்கள் சூழவும் இருந்து களித்த நினைவு வந்தது. அவ்வப்போது எழுதி வந்த கவிதைகளை, ப்ரசுரிக்க எந்த பத்திரிக்கையும் விரும்பாது என்ற நம்பிக்கையால் , எப்போதும் பத்திரிக்கைக்கு எதையும் அனுப்பி வைத்தது இல்லை... சந்தா உட்பட !!.. அவ்வப்போது நூலகங்களில் படிப்பதோடு சர...

வெகு நாட்களுக்கு பிறகு..

Image
மிதவும் வருத்தப்பட்ட விஷயம்.. YSR - ஆந்திர முதல்வரின் திடீர் மரணம். எதிரிக்கும் இப்படிப்பட்ட மரணம் சம்பவிக்ககூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சிப் பொறுப்பில் மீண்டும் அமர்ந்த சில மாதங்களிலேயே அடைந்த மரணம் ஆந்திர மக்களுக்கு பெரிதும் துக்கத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அம்மாநில மக்கள், விரைவில் இந்த துக்கத்திலிருந்து விடுபட்டு, ஒரு சிறந்த தலைமை பெற்று வர வேண்டுகிறோம். கந்தசாமி ரிலீஸ் ஆன இரண்டாவது நாளில், அரைவாசி கூட்டம் நிரம்பிய தியேட்டரில் (பி வி ஆர் முலுன்ட்) என்னுடைய எட்டு மாத பெண் குழந்தையுடனும், அலுவலக நண்பர்கள் குடும்பத்தினருடனும் , கந்தசாமி ஐக் கண்டோம். இரண்டு வருட உழைப்பு படத்தில் நன்றாக தெரிந்தாலும், முதல பாதியில் கதாநாயகிக்கு இத்தனை பாடல் காட்சிகள் கொஞ்சம் அதிகம் போலத்தான் தெரிகிறது. படம் முழுக்க விக்ரம், விக்ரம் , விக்ரம் தான். வடிவேலு கதையை விட்டு சற்றுத் தள்ளி வந்தாலும், வருகின்ற இடங்களில் வெடிவேலுவாக இருக்கின்றார். பிரபுவும் படத்தில் இருக்கின்றார். தேவி பிரசாத்தின் இசையில் இளமைத்துள்ளல். மூன்று மணி நேரமும், தூங்கிக்கொண்டும், படம் பார்த்துக்கொண்டும், ...

M K Stalin appointed Dy CM of Tamil Nadu

மறைந்த முன்னால் முதல்வர்கள் கக்கன் , அண்ணா , காமராஜர் ஆகியோர், பதவி காலத்திற்கு பிறகு என்ன விட்டு சென்றார்கள்.. ? இப்பவும் சில நேரங்களில் அவர்களுடைய சந்ததியினர் பலரின் பொருளாதார நிலை பற்றி பத்திரிகைகளில் வருகின்றது. அதை படித்த நமக்கு , "அடடா, இவர்களுக்கு அவர்கள் ஏதாவது செய்து வைத்து இருக்கலாமே " என்கிற எண்ணம் இழையோடும். அந்த கவலைக்கு இடம் தராமல், நம் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய அடுத்த தலைமுறையைச் சார்ந்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில், வளமான வாழ்க்கை அடித்தளத்தை அமைத்து கொடுத்து இருக்கின்றார். வாழ்க.. சற்று முன் கிடைத்த செய்தி.. மு க ஸ்டாலின் துணை முதல்வர் ஆகின்றார்.. வாழ்த்துக்கள்... வர்ணாசிரம முறைக்கு எதிர்ப்பு காட்டி கழகம் வளர்த்த தி மு க, இன்று தலைவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒவ்வொரு பதவி கொடுத்து மகிழ்கின்றது. மு க ஸ்டாலினுடைய தகுதியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், கழகம் தான் கொண்டிருந்த சில அடிப்படை கொள்கைகளை விட்டு விலகி வெகு தூரம் சென்று விட்டது என்பதைத்தான் சுட்டி காட்ட விரும்பினோம். சோ முன்பொருமுறை துக்ளக்கில் எழுதியது நினைவுக்கு வருகின்ற...

What Next..?

Karunanidhi seemed to have scored the latest "one-up" in the "Support Srilankan Tamils Cause" competition that is taking place among various parties in Tamilnadu. Three cheers to him in any case, as there is atleast a temporary sigh of relief for the civilians fleeing the conflict zone. Kilinochi, Wanni, Mullaithivu.... the army taking control of these places from LTTE is purely an internal affair of a soverign state. We could only pray God, that there are no civilian casualities, and civilians rescued are taken care well and there is no news of discrimination. Sri Lanka is a multi-religious society. About 70% of the population follows Buddhism. Buddhism came to Sri Lanka from India dating back to over two thousands years. Buddhism was regarded the highest ethical and philosophical expression of Sinhalese culture and civilization. Buddhism is a religion of tolerance because it preaches a life of self-restraint. Buddhism teaches a life based not on rules but on princ...