வட்ட நிலா..
வட்ட நிலா தொட்டு விட
எட்டி எட்டி நான் முயல..
எட்ட ஓடும் சுட்டி நிலா
முகிலிடயில் மறைந்ததுவே ... 1
நித்தம் நித்தம் இந்த கதை
தொடர்ந்ததுவே- யாவதனால்
வட்டமான சுட்டி நிலா
களைத்து தினம் இளைத்ததுவோ.. 2
மிக மெலிந்த இந்தத் திங்கள்
காற்றினிலே கறைந்ததுவோ
புவனமதை சுற்றி வந்த
சரிபாதி திங்களிலே.. 3
தொட்டு விட நான் முயல
தொட்டு விட்ட எவரோ தான்
பிட்டு பிட்டு தான் வுண்டு
விட்டனரோ ரீரேழ் நாளில்.. 4
கறைந்துவிட்ட முழு நிலவு
மீண்டு வந்து பிறப்பெடுத்து
மறுபடியும் தொடச்சொல்லி
மூட்டி விடும் இச்சையைத் தான்.. 5
இச்சைப்பட்ட மாந்தர்கள் தாம்
கோடி பல இருந்ததுண்டு
தொட்டு விட இயலாமல்
இச்சகத்தில் தொன்று தொட்டு.. 6
எத்தனை பேர் தொட்டனரோ
எத்தனை பேர் விட்டனரோ..
எண்ணிக்கை தெரியவில்லை
சந்திரனை கேட்டிடுவோம்.. 7
புவி முளைத்த நாள் முதலாய்
அன்று முதல் இன்று வரை
நடந்ததெல்லாம் கவனித்த
சாட்சி தானோ சந்திரனும்.. 8
சந்திரனைச் சந்தித்தால்
ஜகத்தின் கதைகள் பலவும்
கேட்டு நாமும் தெரிந்து கொள்ள
வாய்ப்பதுவும் உண்டென்போம் .. 9
அதனால்...
வட்ட நிலா தொட்டு விட
எட்டி எட்டி நான் முயல..
எட்ட ஓடும் சுட்டி நிலா
முகிலிடயில் மறைந்ததுவே ... 10
-------------------------கார்த்திக் ஐயர், ஸ்ரீரெங்கம் , திருச்சிராப்பள்ளி
எட்டி எட்டி நான் முயல..
எட்ட ஓடும் சுட்டி நிலா
முகிலிடயில் மறைந்ததுவே ... 1
நித்தம் நித்தம் இந்த கதை
தொடர்ந்ததுவே- யாவதனால்
வட்டமான சுட்டி நிலா
களைத்து தினம் இளைத்ததுவோ.. 2
மிக மெலிந்த இந்தத் திங்கள்
காற்றினிலே கறைந்ததுவோ
புவனமதை சுற்றி வந்த
சரிபாதி திங்களிலே.. 3
தொட்டு விட நான் முயல
தொட்டு விட்ட எவரோ தான்
பிட்டு பிட்டு தான் வுண்டு
விட்டனரோ ரீரேழ் நாளில்.. 4
கறைந்துவிட்ட முழு நிலவு
மீண்டு வந்து பிறப்பெடுத்து
மறுபடியும் தொடச்சொல்லி
மூட்டி விடும் இச்சையைத் தான்.. 5
இச்சைப்பட்ட மாந்தர்கள் தாம்
கோடி பல இருந்ததுண்டு
தொட்டு விட இயலாமல்
இச்சகத்தில் தொன்று தொட்டு.. 6
எத்தனை பேர் தொட்டனரோ
எத்தனை பேர் விட்டனரோ..
எண்ணிக்கை தெரியவில்லை
சந்திரனை கேட்டிடுவோம்.. 7
புவி முளைத்த நாள் முதலாய்
அன்று முதல் இன்று வரை
நடந்ததெல்லாம் கவனித்த
சாட்சி தானோ சந்திரனும்.. 8
சந்திரனைச் சந்தித்தால்
ஜகத்தின் கதைகள் பலவும்
கேட்டு நாமும் தெரிந்து கொள்ள
வாய்ப்பதுவும் உண்டென்போம் .. 9
அதனால்...
வட்ட நிலா தொட்டு விட
எட்டி எட்டி நான் முயல..
எட்ட ஓடும் சுட்டி நிலா
முகிலிடயில் மறைந்ததுவே ... 10
-------------------------கார்த்திக் ஐயர், ஸ்ரீரெங்கம் , திருச்சிராப்பள்ளி
Comments
Post a Comment