Posts

Showing posts from September, 2014

வட்ட நிலா..

Image
வட்ட நிலா தொட்டு விட  எட்டி எட்டி நான் முயல.. எட்ட ஓடும்  சுட்டி நிலா  முகிலிடயில்  மறைந்ததுவே ...                   1 நித்தம் நித்தம் இந்த கதை  தொடர்ந்ததுவே-  யாவதனால் வட்டமான சுட்டி நிலா  களைத்து தினம் இளைத்ததுவோ..                2 மிக மெலிந்த இந்தத் திங்கள்  காற்றினிலே கறைந்ததுவோ  புவனமதை சுற்றி வந்த  சரிபாதி திங்களிலே..                                  3 தொட்டு விட நான் முயல  தொட்டு விட்ட எவரோ தான் பிட்டு பிட்டு தான் வுண்டு  விட்டனரோ ரீரேழ் நாளில்..                         4 கறைந்துவிட்ட முழு நிலவு  மீண்டு வந்து பிறப்பெடுத்து  மறுபடியும் தொடச்சொல்லி  மூட்டி விடும் இச்சையைத் தான்..                 5 இச்சைப்பட்...