Posts

Showing posts from May, 2011

மனநிலை ..

எதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து யோசித்து யோசித்து ரெண்டு வாரங்களை நகர்த்தி விட்டேன்.. இனிமேலும் எதுவும் எழுத வில்லை என்றால் அது தமிழினத்திற்கு நான் செய்கின்ற பெரிய துரோகமாக இருக்கும் என்று தோன்றியது. தமிழினத்திற்கு பெரிய துரோகம் என்று நினைத்த போது, இலங்கை ஈழம் நினைவுக்கு வராமல் இல்லை.. அமைதியையும், அகிம்சையையும் போதித்த பௌத்த மதத்தை , மதிக்கும் பெரும்பான்மை மக்கள் வாழும் இலங்கையில் , சில காலங்களுக்கு முன்பு வரை , தினமும் , நூற்றுகனக்கானவர்கள் செத்து மடியும் செய்தி கேட்டு கேட்டுப் பழகி இருந்த காதுகளுக்கு இப்போது அப்படிப்பட்ட செய்திகள் வருவதில்லை என்பதை நினைத்து மகிழ்வதா.. இல்லை, தீவிரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில், பல லட்சக்கணக்கான பொதுமக்களையும் பலி கொண்ட அந்த சோக வரலாற்றை நினைத்து வருத்தபடுவதா.. அல்லது, அந்த நேரத்தில், தமிழை மிக அழகாக போற்றியும், பேசிகொண்டிருந்த சகோதர சகோதரிகள் உயிர் துறக்கும் நேரம், கையாலாகாத தலைவர்கள், டெல்லிக்கு கடிதம் எழுதி பொழுதை கடத்தி கொண்டிருந்த மான்பை எண்ணி வேதனை படுவதா என்ற , ஒரு விதமான புரிந்தும் புரியாத , உண்மை நிலவரத்தை ஏற்றுக்கொண்டும், ...