கல்லா கட்டுவோம்..
ஈராக்கில் இந்திய அரிசி.. காங்கிரசார் வயிற்று எரிச்சல்.. "ஈராக்கை அடிமைத்தளையிலிருந்து நாம் விடுவித்தோம்.. மட்டுமின்றி அவர்களுக்குத் தேவையான பல்வேறு வசதிகளையும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம்.. இந்நிலையில் அவர்கள், நமது நாட்டு அரிசியை விட்டு விட்டு, இந்திய பாஸ்மதி அரிசியை நாடுவது என்ன நியாயம் ? " என்று அமெரிக்க காங்கிரசார் வயிற்று எரிச்சலுடன் அறிக்கை விட்டு இருக்கிறார்கள்.. அடிமைத்தளையில் இருந்து விடுவித்தது சுதந்திரமாக சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் தானே ? இவர்கள் சொல்வதைப் பார்த்தால், விடுவித்தது கல்லாகட்டத் தான் போலிருகின்றது....!!! ... இந்தியன் எக்ஸ்பிரஸ்..