Posts

Showing posts from 2010

Feb 2010

மை நேம் இஸ் கான் - சமீபத்தில் நான் பார்த்து ரசித்தத் திரைப்படங்களில் ஒன்று.. ஷாருக் கானுக்கு இது இன்னொரு மைல் கல்.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.. தமிழ் படம் பார்க்கும் வாய்ப்பு தள்ளிப் போய் கொண்டே இருக்கின்றது.. கடந்த வாரம் மும்பை பீ வீ ஆரில் பார்த்த தமிழ் படம் தீராத விளையாட்டுப் பிள்ளை- நல்ல படம்பா. Tendulkar - scored 200 vs South ஆப்ரிக்கா இப்போது ரசித்து பார்த்து கொண்டு இருப்பது... W R வரதராஜன் - முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரின் முடிவு அதிர்ச்சி அடைய வைத்தது.. மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் இது போன்ற முடிவு எடுப்பது நல்லதல்ல.. அது போக, சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகள் கவலை தருகின்றது.. காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் இழப்பது விலை மதிப்பில்லாத உயிர் அல்லவா ? எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் தயை புரிவார்களாக..